மும்பை வான்கடே மைதானத்தில் நேற்றையதினம் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 7ஆவது லீக் போட்டியில் டெல்லி கபிட்டல்ஸ் அணியினை மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வென்றுள்ளது.
நாணயச்சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி ன் களத்தடுப்பினை தொிவு செய்த நிலையில் முதல்லி துடுப்பெடுத்தாடிய டெல்லி கபிட்டல்ஸ் அணி நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 147 ஓட்டங்களை எடுத்தது.
ராஜஸ்தான் அணியில் உனத்கட் மூன்று விக்கெட்டுகளும், முஸ்தாபிஜுர் ரஹ்மான் இரண்டு விக்கெட்டுகளும், கிறிஸ் மாரிஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து 148 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19.4 ஒவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 150 ஓட்டங்களை எடுத்ததன் மூலம் மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.
டெல்லி அணியின் சார்பில் அதிகபட்சமாக அவிஷ் கான் மூன்று விக்கெட்டுகளும், வோக்ஸ் மற்றும் ரபடா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இன்றையதினம் மும்பையில் நடைபெறும் 8ஆவது லீக் போட்டியில் சென்னை அணியும் பஞ்சாப் அணியும் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது