பாகிஸ்தானில் போராட்டங்கள் தீவிரமாகி வருவதால் ருவிட்டர், முகப்புத்தகம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.
தெஹ்ரிக்-இ-லாபாயக் கட்சியின் தலைவர் சாத் ரிஸ்வி, முகமது நபியின் கார்ட்டூனை வெளியிட்டதற்கு எதிராக பிரெஞ்சு தூதரகத்தில் போராட்டத்தை முன்னெடுத்ததனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டார். ந்
அவரது கைதை எதிர்த்து பாகிஸ்தானில் தெஹ்ரிக்-இ-லாபாயக் கட்சியைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு எதிராக காவல்துறையினா் தாக்குதல் நடத்தியதில் ஏற்பட்ட மோதலில் 4 பேர் காவல்துறையினா் பலியாகியுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் பாகிஸ்தானில் போராட்டம் தினமும் தீவிர அடைவதைத் தொடர்ந்து அதனைத் தடுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ள அரசு சமூக வலைதளங்களை முடக்கியுள்ளது.
உசட்டம்- ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக சில சமூக ஊடகங்கள் தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தானின் மூத்த தொழில்நுட்ப நிபுணர் ஒருவர் தொிவித்துள்ளாா்.
2015ஆம் ஆண்டு முகமது நபிகள் குறித்த கேலிச் சித்திரங்களை வெளியிட்டதற்காக பாரீஸில் அமைந்துள்ள சார்லி ஹெப்டோ பத்திரிகை நிறுவனம் தாக்குதலுக்கு உள்ளானது. இதில் இந்தப் பத்திரிகையின் ஆசிரியர் ஸ்டெபேன் கார்போனியர் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை பாகிஸ்தானில் நிலவும் வன்முறை காரணமாக பிரான்ஸ் நாட்டு மக்கள் வெளியேறுமாறு அந்நாட்டு அரசாங்கம் கேட்டுள்ளது.