கொரோனா தொற்று அதிகரிப்பை அடுத்து, வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.
இலங்கையில் நடப்பு ஆண்டில் 52 ஆயிரத்து 710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்களில் 1,593-பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் ஆவர்.
வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு தொற்று பாதிப்பு ஏற்படுவது அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் இந்த மாதத்தில் 3,480- பேருக்கு உறுதி செய்யப்பட்டதில் 538 பேர் வெளிநாடுகளில் இருந்தது வந்தவா்களாவா்.
இந்நிலையில் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் குறித்த முகாமைத் திட்டங்களை மறு ஆய்வு செய்ய வேண்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 168 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.