பிரான்ஸில் கடத்தப்பட்டுக் காணாமற் போயிருந்த எட்டு வயதுச் சிறுமி மியா வும் அவரோடு தலைமறைவாகி இருந்த தாயாரும் சுவிஸில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். சுவிற்சர்லாந்தில் பிரெஞ்சு மொழி பேசும் Vaud என்ற கன்ரன் பகுதியில் Sainte-Croix என்னும் இடத்தில் தாயையும் மகள் மியா வையும் சுவிஸ் பொலீஸாருடன் இணைந்து பிரான்ஸின் பொலீஸ் அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடத்தப்பட்டு ஐந்து தினங்களுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்ற மியா நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளார்
என்று விசாரணையாளர்கள் கூறியுள்ளனர். சிறுமியை மீண்டும் அவரது பேர்த்தி யாரின் பொறுப்பில் ஒப்படைக்க நீதிமன் றம் உத்தரவிட்டுள்ளது. 28 வயதான தாயார் சுவிஸ் பொலீஸ் நிலையம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே ஐந்து பேர் பிரான்ஸில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
பாதுகாப்புக்கருதி நீதிமன்றம் ஒன்றி னால் தாயாரிடம் இருந்து பிரிக்கப்பட்டிருந்த சிறுமி மியா, அவரது பேர்த்தியாரின் வீட்டில் வைத்து கடந்த 13 ஆம் திகதி கடத்தப்பட்டார். வன்முறைகளில் ஈடுபடுகின்ற இயக்கம் ஒன்றைச் சேர்ந்த சிலரது உதவியுடன் மியாவின் தாயாரேஅவரைக் கடத்திச் சென்று தலைமறை
வாகி இருந்தார். (படம் :பரிஷியன் செய்திச் சேவை.)