95
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தொழிலாளர் தினமான மே தினத்தை இம்முறை தனித்து நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில், கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன, தலைமையில் கொழும்பில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக ஆளும் பங்காளிக் கட்சிகளுக்கும், ஆளும் பிரதான கட்சியான பொதுஜனபெரமுனவுக்கும் இடையில் தொடரும் இழுபறியிடையே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டள்ளது. குறிப்பாக அண்மையில் ஆளும் கூட்டணிக்குள் உள்ள 11 கட்சிகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் ஒன்று கூடி கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.
Spread the love