இந்தியாவுக்கான பயணக் குமிழி பயணத்தை இலங்கை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது என சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாரிய அளவில் அதிகரித்து வரும் நிலையிலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது என அவ்வமைச்சு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக, எதிர்வரும் 26ஆம் திகதி வரையிலும் புதுடெல்லியில் முழு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இம்மாதம் ஆரம்பிக்கப்பட்டிருந்த இந்தியாவுக்கான பயணக் குமிழி பயணம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், ஏனைய நாடுகள் சிலவற்றுக்கும் இவ்வாறான பயணக் குமிழி பயணத்தை முன்னெடுப்பது தொடர்பில் சுற்றுலாத்துறை அமைச்சு பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.