ஈஸ்டர் தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவு நிகழ்வு நாளைய தினம் யாழ்ப்பாணம் மரியன்னை ஆலயத்தில் இடம்பெற வுள்ளதாக யாழ்ப்பாண மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிக்களார் தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற தொடர் குண்டு நடைபெற்ற இரண்டாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நாளை புதன்கிழமை 21 ஆம் தேதி அனுஷ்டிக்கப்படவுள்ளது,
அந்நிலையில் அது தொடர்பில் ஊடகங்களுக்கு குரு முதல்வர் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
நாளைய தினம் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத் திலும் கட்டுவாப்பிட்டிய செபஸ்தியர் ஆலயத்திலும் நினைவு அஞ்சலிகளும் ஆராதனைகளும் திருப்பலிகளும் ஒப்புக் கொடுக்கப்படுகின்றன.
அதேவேளை ஏனைய மாவட்டங்களிலும் நினைவு தின நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன எங்களுடைய யாழ் மறை மாவட்டத்திலே உள்ள ஆலயங்களிலே 08:45 க்கு ஆலயமணி ஒலிக்கப்பட்டு, மௌன அஞ்சலிகள் இடம்பெற்று, தீபங்கள் ஏற்றப்பட்டு, சிறப்பு ஆராதனைகளும் இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாணம் மரியன்னை ஆலயத்தில் நாளை காலை 8.45 மணி அளவில் இந்த விசேட ஆராதனைகள் இடம்பெறுகின்றன எனவே அனைத்து மக்களும் அந்த பூசை வழிபாடுகளில் கலந்துகொண்டு பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
அத்தோடு அரசாங்கத்தினால் நினைவஞ்சலியினை நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவே ஈஸ்டர் தாக்குதல் இரண்டாவது ஆண்டு நினைவஞ்சலிகள் நாளை காலை மரியன்னை ஆலயத்தில் இடம்பெறும் என தெரிவித்தார்