மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக்கில் உள்ள அரச மருத்துவமனையில் இன்று புதன்கிழமை ஏற்பட்ட ஒக்சிஜன் கசிவினால் 22 போ் உயிாிழந்துள்ளனா்.
மருத்துவமனைக்கு ஒக்சிஜன் கொண்டுவந்த டாங்கர் லொரியில் இருந்து ஒக்சிஜனை மாற்றும்போது திடீரென வாயுக் கசிவு ஏற்பட்டதையடுத்து, கசிவை நிறுத்த ஒக்சிஜன் விநியோகம் நிறுத்தப்பட்டதால், அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த கொரோனா தொற்றாளர்கள் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த மருத்துவமனையில் 131 நோயாளிகள் ஒக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்ததாகவும் 15 பேர் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்ததாகவும் திடீரென ஒக்சிஜன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதையடுத்து, இவ்வாறு 22 கொரோனா தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளனா் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.