யாழ்.நகரின் மத்தி மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் வியாபர நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளை நீரினால் கழுவி சுத்தம் செய்து , கிருமி தொற்று நீக்கி மருந்துகளை விசிறும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டனர்.
யாழ்.நகர் மத்தி பகுதியில் கடந்த மாதம் பெருமளவான கொரோனா நோய் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து அப்பகுதிகள் முடக்கப்பட்டிருந்தன அதன் பின்னர் புத்தாண்டை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் மீளதிறக்கப்பட்டு வியாபர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன்போது புத்தாண்டை முன்னிட்டு பெருமளவானோர் அப்பகுதியில் கூடி உடுபுடவைகள் வாங்கியிருந்தனர்.
இந்நிலையில் இராணுவத்தின் 51ஆவது படையணியின் கட்டளை அதிகாரியின் வழிகாட்டலில் 512 ஆவது படைப்பிரிவை சேர்ந்த இராணுவத்தினர் யாழ்ப்பாணம் நவீன சந்தை மற்றும் பஜார் வீதி ஆகியவற்றை நீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்ததுடன் , கிருமி தொற்று நீக்கி மருந்தையும் விசிறினர்.