இந்தோனேசியாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள பாலி தீவு அருகே சென்று கொண்டிருந்த அந்த நாட்டு ராணுவத்துக்கு சொந்தமான ‘நங்கலா 402′ என்கிற நீர்மூழ்கி கப்பல் நேற்று 53 ராணுவ வீரர்களுடன் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது காணாமல் போயுள்ளது
பாலி தீவிலிருந்து 95 கிலோ மீற்றா்ர் தொலைவில் கடலில் பயணித்துக் கொண்டிருந்தபோது இந்த நீர்மூழ்கி கப்பல் திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து காணாமல் போயுள்ளது. நீர்மூழ்கி கப்பல் என்ன ஆனது, அதில் உள்ள 53 வீரர்களின் கதி என்ன? என்பது குறித்து தகவல்கள் இல்லை.
இதையடுத்து அங்கு போர்க்கப்பல்கள் குவிக்கப்பட்டு காணாமல் போன நீர்மூழ்கி கப்பலை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ராணுவ தளபதி தொிவித்துள்ளாா்.
மேலும் நீர்மூழ்கி மீட்பு கப்பல்களை வைத்துள்ள அவுஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூரிடம் உதவி கோரியுள்ளதாகவும் ராணுவ தளபதி தொிவித்துள்ளாா்.