யாழ்ப்பாணம், காங்கேசன்துறை மத்தி் கிராம சேவகர் பிரிவில் 2018ஆம் விடுவிக்கப்பட்ட நிலத்தை இரவோடு இரவாக இராணுவத்தினர் உரிமை கோரி அறிவித்தல் பலகையினை நாட்டியுள்ளனர்.
பருத்தித்துறை பொன்னாலை வீதியில், காங்கேசன்துறை மத்தி் கிராம சேவகர் பிரிவில் இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயமாக 27 ஆண்டுகளாக இருந்து 2018ஆம் விடுவிக்கப்பட்ட நிலமே இரவோடு இரவாக இராணுவத்தினர் உரிமை கோரி அறிவித்தல் பலகையினை நாட்டியுள்ளனர்.
இவ்வாறு அறிவித்தல் பலகை நாட்டியுள்ள காணியானது, இருவருக்கு உரித்தான 8 பரப்புக் காணியாகும். இப் பகுதி விடுவிக்கப்பட்ட பின்பு காணி் உரிமையாளர்கள் காணியை துப்பரவு செய்திருந்தனர்.
ஆனாலும் அக்காணியில் அவர்கள் மீள் குடியேறாத நிலையில் காணி காணப்பட்டப்பட்ட போது இராணுவத்தினர் அதனை கையகப்படுத்த முனைந்துள்ளனர்.
அதேவேளை அந்த காணிகளுக்கு அருகே காணப்பட்ட வீதியினை பிரதேச சபையும் புதிதாக அமைத்து வழங்கியிருந்தது.