யாழ்ப்பாணத்தில் 13 பேருக்கும் மன்னாரில் இருவருக்கும் என வடக்கு மாகாணத்தில் 15 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று திங்கட்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 249 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அதில்,15 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
சாவகச்சேரி வைத்தியசாலையில் நால்வருக்கும் (இருவர் வெளிநோயாளர் பிரிவிலும் இருவர் நோயாளர் விடுதியிலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்) பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இருவருக்கும் (இருவரும் நேற்று கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டவருடன் நேரடித் தொடர்புள்ளவர்கள்) தெல்லிப்பழை வைத்தியசாலை விடுதியில் சிகிச்சை பெற்ற நோயாளி இருவருக்கும் தாதிய உத்தியோகத்தர் ஒருவருக்கும்என மூவருக்கும் , சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்ற மூவருக்கும் என 13 பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதேவேளை மன்னார் மாவட்ட வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்ற இருவருக்கும் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்