115
முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் நுவன் சொய்சாவிற்கு 6 வருடங்களுக்கு கிரிக்கெட் விளையாட சர்வதேச கிரிக்கெட் சபை தடை விதித்துள்ளது.
42 வயதான நுவன் சொய்சாவினால் குறித்த காலப்பகுதியில் வ்வித போட்டிகளிலும் கலந்து கொள்ள முடியாத வகையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்ற ரி10 போட்டியில் ரீம் ஶ்ரீலங்கா அணியின் பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக இருந்த சந்தர்ப்பத்தில் ஊழல் மோசடி எதிர்ப்பு விதிகளை மீறியதற்தாக அவருக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love