90
கொரோனா தொற்றாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்படும் காவல்துறைப்பிரிவுகள்மற்றும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் , எவ்வித முன்னறிவித்தலுமின்றி முடக்கப்படுமெனவும் இந்த நிலைக்கு முகம் கொடுக்க மக்கள் தயாராக இருக்க வேண்டும் எனவும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவி்த்துள்ளார்.
இதற்கு முன்னர் முன்னறிவித்தல் வழங்கப்பட்டு பிரதேசங்கள் முடக்கப்பட்ட போதும் தற்போதைய தொற்று அதிகரிப்பின் காரணமாக எவ்வித அறிவிப்புமின்றி முடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதெனவும் தெரிவித்துள்ள அவர் எனினும் நாட்டை முழுமையாக முடக்க எதிர்பார்க்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
Spread the love