104
திருகோணமலை மாவட்டத்தில் பல கிராம சேவகர் பிரிவுகள் மறு அறிவித்தல் வரையில் மூடப்பட்டுள்ளன. இன்றுகாலை 7 மணிமுதல் அமுலுக்கு வரும் வகையில் இவை முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளாா்.
உப்புவேலி காவல்துறைப் பிரிவிலுள்ள சுமேதங்கபுரம் கிராம சேவகர் பிரிவு திருகோணமலை காவல்துறைப்பிரிவிலுள்ள மூதோவ் கிராம சேவகர், கோவிலடி கிராம சேகவர், லிங்காநகர் ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் சீனக்குடா காவல்துறைப்பிரிவிலுள்ள கவட்டிகுடா கிராம சேவகர் பிரிவு , டயினாபே கிராம சேவகர் பிரிவு ஆகியவையே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன எனவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.
Spread the love