கொரோனா இரண்டாம் அலை பரவல் உ இந்தியாவில் வெகுவேகமாக பரவி உச்சத்தைத் தொட்டு வருகின்ற நிலையில் கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி புது டெல்லியில் நடைபெற்ற உயர் மட்ட அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில், கொரோனா தீவிரமாக உள்ள 150 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கைக் கொண்டு வரலாம் என சுகாதாரத்துறை அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது
குறிப்பிட்ட அந்த மாவட்டங்களில் தற்போது 15 வீதத்துக்கும் மேலாக கொரோனா பரவல் உள்ளதெனவும் போகப் போக இது மிக வேகமாக அதிகரிக்க வாய்ப்பிருப்பதால் இந்த மாவட்டங்களில் முழு ஊரடங்கினை கொண்டுவருவதன் மூலம் பரவலைக் கட்டுப்படுத்தலாமெனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை தொிவித்ததாக தொிவிக்கப்பட்டுள்ளது
ஏற்கனவே டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய அரசுகள் தத்தமது மாநிலங்களில் முழு ஊரடங்கை அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகின்றன. தமிழகத்தில் 26ஆம் திகதி புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, ஞாயிறு தோறும் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாடு முழுதும் 150 மாவட்டங்களில் மட்டும் முழு ஊரடங்கை அமுல்படுத்த மத்திய சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது. எனினும் மத்திய அரசு , மாநிலங்களுடன் ஆலோசனை நடத்தியதன் பின்னரே முடிவு செய்யப்படுமெனவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 150 மாவட்டங்களில் கொரோனா பரவல் வேகம் அதிகமாக இருக்கிற தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோயமுத்தூர், மதுரை, தூத்துக்குடி திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களும் உள்ளடங்குவதனால் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னா் மத்திய அரசே முழு ஊரடங்கிரைனஅறிவிக்கலாம் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது
2021 ஏப்ரல் 28 புதன்கிழமை நிலவரப்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,60,960 புதிய நோய்த்தொற்றுகள் ஏற்பட்டுள்ளதுடன் 3293 இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.