இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 18 கொரோனா நோயாளிகள் உயிாிழந்துள்ளனா்.
குறித்த மருத்துவமனையில் 70-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மருத்துவமனையின் 4 மாடி கட்டிடத்தில் உள்ள கொரோனா சிகிச்சை பிாிவில் இன்று அதிகாலை குறித்த தீவிபத்து ஏற்பட்டதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அங்கு வந்த தீயணைப்பு படையினர் 1 மணி நேர போராட்டத்தின் பின்னா் தீயினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா்.
எனினும் 12 நோயாளிகள் சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளதாகவும் சிகிச்சைக்காக காயமடைந்தவா்கள் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் 6 பேர் உயிரிழந்ததாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மீட்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சமீப காலமாக மருத்துவமனைகளில் விபத்து ஏற்பட்டு மக்கள் உயிரிழப்பது அதிகமாக உள்ளது. கடந்த 26ம் திகதி மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில்ருத்துவமனையில் நடந்த தீ விபத்தில் 4 பேர் பலியானார்கள்.
அதற்கு சில நாட்களுக்கு முன்பாக பால்கார் மாவட்டத்தில் உள்ள விரார் நகரில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர்.
அடுத்து நாசிக் நகரில் மருத்துவமனையில் ஒக்சிஜன் கசிந்து 22 கொரோனா நோயாளிகள் உயிரிழந்திருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது