இந்தியாவில் தங்கியுள்ள அவுஸ்திரேலியர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பி வருவது குற்றம் என அறிவித்துள்ள அந்நாட்டு அரசாங்கம் அப்படித் திரும்பி வருகிறவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம் எனவும் தொிவித்துள்ளது.
இந்தியாவில் கொவிட் 19 நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவா்களின் விகிதத்தை அடிப்படையாக கொண்டு இந்த சட்டம் போடப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வாரத் தொடக்கத்தில், இந்தியாவிலிருந்து வரும் அனைத்து விமானங்களுக்கும் அவுஸ்திரேலியா தடை விதித்துள்ளது . இந்தியாவில் சுமார் 9 ஆயிரம் அவுஸ் திரேலியர்கள் உள்ள நிலையில் அவர்களில் 600 பேர் பாதிப்புக்குள்ளாகக் கூடியவர்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
எதிாவரும் திங்கட்கிழமையில் இருந்து 14 நாள்களுக்கு இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியா திரும்பவேண்டிய நிலையில் உள்ளவாகள் அனைவரும் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த நடவடிக்கையானது இந்தியாவிலிருந்து திரும்பி வருகிறவர்களால் ஏற்படும் ஆபத்தின் அளவைக் காட்டிலும் அதிதீவிரமான நடவடிக்கை என மருத்துவா் ஒருவா் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது