அமைதி வழி போராட்டங்களை நிகழ்த்துவதற்கான உரிமையைப் பறிப்பதானது கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் மற்றும் பேச்சுரிமை சுதந்திரத்திற்கான உரிமையை மீறும் செயற்பாடாகும் என ஊடக அமைப்புகளின் கூட்டமைப்பு தொிவித்துள்ளது.
இன்றையதினம் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கை ஈவ்வாறு தொிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் தொிவிக்கப்பட்டுள்ளதாவது
காவல்துறை அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில், பிரமுக வாகன தொடரணி காரணமாக பிரதான சாலையில் போக்குவரத்தை நிறுத்துவதற்கு எதிராக அமைதியான முறையில் போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய பத்தரமுல்ல பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டதாக ஊடகங்களில் நேற்று காலை (30) செய்தி பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இதுபோன்ற கைது நடவடிக்கைகள் காரணமாக பொதுமக்களின் அமைதி வழி போராட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமை மற்றும் சுதந்திரம் மீறப்படுவதுடன், இவ்வகையான பொதுமக்களின் உரிமைகளை மீறும் செயற்பாடுகளுக்கு எதிராக ஊடக கூட்டமைப்பு தமது கடும் எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் சமூக ஊடகங்கள் மற்றும் பிரதான ஊடகங்களில் காணக்கூடியதாக இருந்ததுடன் , அங்கு பொது மக்கள் பயன்படுத்தும் பிரதான வீதியில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டு பிரமுகர் வாகன தொடரணிக்கு சிறப்பு வாய்ப்பு வழங்குவதற்கு எதிராக ஒரு இளைஞ்சர் செயற்படும் விதம் காணக்கூடியதாக உள்ளது. மேலும் இரவில் பிரதான வீதியில் செல்லும் அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையானது எந்தவொரு அவசர தேவைக்கும் அல்ல முக்கிய பிரமுக வாகன தொடரணிக்கு ஆகவே பிரதான வீதி தடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி அங்கு நிறுத்தப்பட்டுள்ள அனைத்து வாகனங்களின் கொம்புகளை(ஊதுகுழல்) ஒலித்து தனது எதிர்ப்பை தெரிவிக்குமாறு குறித்த இளைஞன் கோரியது காணொளிப்பதிவிலிருந்து தெளிவாகிறது.
எந்தவொரு நடவடிக்கைக்கும் எதிர்ப்பு தெரிவிக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு என்பதைக் கடந்தகால பல உச்சநீதிமன்ற தீர்ப்புகளிலிருந்து ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். பிரபல வழக்கான அமரதுங்க எதிரிவ சிரிமல் மற்றும் பலர், என்கிற ஜனகோஷா வழக்கு (264 SLR (1993) 1) இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
கொம்புகளை(ஊதுகுழல்) பயன்படுத்தி ஒலியெழுப்பி எதிர்ப்பை தெரிவித்தல் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்/பேச்சுரிமையின் ஒரு பகுதியாகும் என்பதைக் குறித்த தீர்ப்பு அங்கீகரிக்கின்றது.
பிரமுக வாகன தொடரணிக்கு முன்னுரிமை அளித்ததன் காரணமாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிரதான வீதியில் போக்குவரத்தை நிறுத்தியதை எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட நபரின் அரசியல் கட்சி அல்லது அரசியல் நிலைப்பாடு எமக்குத் தெரியாது என்பதுடன், மேலும் அவரது எதிர்ப்பு நடவடிக்கையானது அமைதியான முறையில் நடைபெற்றது என்பதையும் குறித்த காணொளிப்பதிவிலிருந்து அறிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது.
ஜனநாயக சமுதாயத்தில், அத்தகையதொரு எதிர்ப்பு நடவடிக்கையாவது செய்ய முடியாவிடின் அது ஒரு சிறந்த நிலை அல்ல. மேலும்,அமைதியான முறையில் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபடுபவர்களை பல்வேறு குற்றச்சாட்டின் பேரில் கைது செய்வது, எந்த காரணத்தை கொண்டும் நியாயப்படுத்த முடியாது.
அரசியலமைப்பால் உறுதியளிக்கப்பட்ட கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் மற்றும் பேச்சுரிமை சுதந்திரத்திற்கு இடையூறு விளைவித்தல் மற்றும் பேச்சு மற்றும் கருத்துரிமையைப் பயன்படுத்தியவர்களைக் கைது செய்தல் போன்ற நடவடிக்கைகள் கடந்த காலங்களில் ஏராளமாக நடந்தேறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இது மிக மோசமான நிலைமையாகும்.
கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் மற்றும் பேச்சுரிமை சுதந்திரத்தை உறுதிப்படுத்திச் செயற்படுமாறும், மேலும் குறித்த உரிமைகளைப் பயன்படுத்துபவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையை நிறுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தக் கோரி கருத்து வெளிப்படுத்தும் உரிமை மற்றும் பேச்சுரிமைக்காகக் குரல்கொடுக்கும் அனைத்து மக்களையும் ஊடக அமைப்புகளின் கூட்டமைப்பு கேட்டுக்கொள்கின்றது.
தர்மசிறி லங்காபேலி,செயலாளர்,ஊடக தொழிலாளர் தொழிற்சங்க சம்மேளனம்
சீதா ரஞ்சனி,அழைப்பாளர் ,சுதந்திர ஊடக இயக்கம்
துமிந்த சம்பத்,தலைவர்,இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம்
என்.எம் அமீன்,தலைவர்,ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்
கணபதிப்பிள்ளை சர்வானந்த,செயலாளர்,இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்
இந்துநில் உஸ்கொட ஆரச்சிசெயலாளர்,இலங்கை இளம் பத்திரிகையாளர்கள் சங்கம்.