தமிழக சட்டசபை தேர்தலில், திமுக – அதிமுக.,விற்கு மாற்று எனக் கூறி மூன்றாவது அணி அமைத்து, கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி தேர்தலில் போட்டியிட்டது .
இந்த தேர்தலில் கமலின் கட்சி குறிப்பிட்ட இடங்களை அள்ளும், கோவை தெற்கு தொகுதியில் கமலுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என கூறப்பட்டது.
மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சியும், சமயத்துவ மக்கள் கட்சியும் இடம்பெற்றிருந்தன. இதில் மக்கள் நீதி மய்யம் 142 இடங்களிலும், இஜக 40 இடங்களிலும், சமக 33 இடங்களிலும் போட்டியிட்டன. இருந்தும் கமலின் மக்கள் நீதி மய்யம் மற்றும் அவர்களின் கூட்டணி கட்சிகள் சார்பில் யாரும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஓட்டுக்களை பெறவில்லை. மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு 4 வது இடமே கிடைத்துள்ளது.
அதே சமயம் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட 142 வேட்பாளர்களில் கமல் ஒருவர் மடடுமே கடைசி வரை முன்னிலையில் இருந்து வந்தார். அவரது கட்சி மற்றும் கூட்டணி சார்பில் கமல் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நிமிடத்தில் பாஜக.,வின் வானதி சீனிவாசனிடம் 1500 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
இதன் மூலம் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் மற்றும் அதன் கூட்டணிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. அதே சமயம் கோவை மாவட்டத்தில் திமுக.,வின் ஓட்டுக்களை மக்கள் நீதி மய்யம் தான் கணிசமாக பிரித்துள்ளதாக கூறப்படுகிறது.
கொங்கு மண்டலத்தில் திமுக அடைந்துள்ள தோல்விக்கு கமலின் மக்கள் நீதி மய்யம் கொடுத்த கடும் போட்டியே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
தமுமுக மனிதநேய மக்கள் கட்சி புதிய நீதிக் கட்சி விடுதலைச் சிறுத்தைகள் புதிய தமிழகம் பகுஜன் சமாஜ் கட்சி மக்கள் நீதி மய்யம் மனிதநேய ஜனநாயகக் கட்சி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி எஸ்டிபிஐ சமத்துவ மக்கள் கட்சி நாம் தமிழர் கட்சி பாமக தமிழக வாழ்வுரிமைக் கட்சி மதிமுக அதிமுக திமுக காங்கிரஸ் பாஜக தமாகா இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆம் ஆத்மி தமுமுக மனிதநேய மக்கள் கட்சி புதிய நீதிக் கட்சி விடுதலைச் சிறுத்தைகள் புதிய தமிழகம் பகுஜன் சமாஜ் கட்சி மக்கள் நீதி மய்யம் மனிதநேய ஜனநாயகக் கட்சி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி எஸ்டிபிஐ சமத்துவ மக்கள் கட்சி நாம் தமிழர் கட்சி பாமக தமிழக வாழ்வுரிமைக் கட்சி மதிமுக அதிமுக திமுக காங்கிரஸ் பாஜக தமாகா திமுக மற்றும் காங்கிரசிற்கு கடும் டஃப் கொடுத்த மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாதது கடும் அதிர்ச்சியை தந்துள்ளது. அக்கட்சி சார்பில் போட்டியிட்ட சிநேகன், ஸ்ரீபிரியா, மகேந்திரன், பழ.கருப்பைய்யா என எவரும் வெற்றிமுகத்தை எட்டவில்லை.