131
சர்வதேச ஊடக சுதந்திர தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை மதியம் 1 மணியளவில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
அதன்போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர் தூபி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதேவேளை கொரோனோ தொற்றில் உயிரிழந்தவர்களையும் நினைவு கூர்ந்ததுடன், கொரோனோ பெரும் தொற்றலிருந்து மக்கள் மீண்டு வரவேண்டும் எனவும் பிரார்த்திக்கப்பட்டது.
கொரோனோ தொற்று காரணமாக மட்டுப்படுத்தப்பட்டவர்களுடன் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
Spread the love