சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் லட்சுமிபதி பாலாஜிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து, ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியும் கடுமையான தனிமைப்படுத்தும் முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனா்.
இதனால் நாளை நடக்கும் சென்னை மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்களான வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, நேற்றையதினம் நடைபெறவிருந்த கொல்கத்தா, ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான போட்டி ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் நாளை நடக்க இருந்த சிஎஸ்கே, ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. குறித்த இரு போட்டிகளும் எப்போது நடத்தப்படும் என்பது குறித்து இதுவரை அறிவிக்கவி்ல்லை.
ஒவ்வொரு அணி வீரர்களுக்கும் அணியில் பிற ஊழியர்களுக்கும் பலஅடுக்கு பரிசோதனை, தனிமைப்படுத்துதல் போன்றவற்றை முடித்துதான் பயோ-பபுள் உருவாக்கப்பட்டுள்ளது. மிகவும் பாதுகாப்பான பயோ-பபுள் சூழலுக்குள் கொரோனா வைரஸ் புகுந்துள்ளமை ஐபிஎல் நிர்வாகத்துக்கு பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
அதிலும் மிகப்பெரிய அணியான சிஎஸ்கே அணியின் ரத்து செய்யப்பட்டிருப்பமை வர்த்தகரீதியாகவே பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது
எனினும் டெல்லியில் இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைரஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையிலான போட்டி வழக்கம் போல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது