பிரான்ஸில் கொரோனா சுகாதார நெருக்கடிக்குள் தங்கள் பணிகளை தொடர்ந்து செய்துவந்த வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இரண்டாயிரம் பேருக்கு விரைவான பரிசீலனையின் அடிப்படையில் பிரெஞ்சுக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் பிறந்த 665 இளவய தினர் உட்பட இரண்டாயிரத்து ஒன்பது (2009)பேருக்கு “நாட்டுடன் கொண்டிருந்த நெருக்கமான ஈடுபாட்டின்” அடிப்படை யில் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக அதற்குப் பொறுப்பான அமைச்சர் மார்லின் ஷியப்பா (Marlene Schiappa) தெரிவித்திருக்கிறார்.
கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் அத்தியாவசியத் தொழில்களில் ஈடுபட்டவர்களது குடியுரிமை விண்ணப் பங்களை முன்னுரிமை அடிப்படையில் விரைவாகப் பரிசீலித்து “செயற்றிறன் மிக்க பங்களிப்பை” வழங்கியோருக்கு குடியுரிமை வழங்குமாறு அரசு கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தது. குடியுரிமை க்கு விண்ணப்பிப்பதற்கு ஐந்து ஆண்டுகள் பிரான்ஸில் வதிவிட காலத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்ற நிபந் தனை அவர்களுக்கு இரண்டு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது.
மருத்துவப் பணியாளர்கள், காசாளர்கள், காவலர்கள், கழிவு அகற்றுவோர், துப்புரவுப் பணியாளர்கள் என்று பலதரப்பட்டவர்கள் இத்திட்டத்தினுள் உள்ளடக்கப்பட்டிருந்தனர். அதன்படி எட்டாயிரம் விண்ணப்பங்கள் கிடைத் திருந்தன என்று அமைச்சர் மார்லின் ஷியப்பா தெரிவித்திருக்கிறார். பிரான்ஸில் கடந்த ஆண்டு 61,371 பேருக்கு குடியுரிமை (naturalisation) வழங்கப்பட்டுள்ளது.2019 ஆம் ஆண் டுடன் ஒப்பிடுகையில் அது 20 சத வீதம் குறைவாகும் என்று ஏஎப்பி செய்தி ஒன்று தெரிவிக்கிறது.
குமாரதாஸன். பாரிஸ்.
06-05-2021