கொரோனா இரண்டாம் அலையால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் மே 10 முதல் 24ஆம் தேதி வரை முழு முடக்கம் நடைமுறைப்படுத்தப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இரண்டு வாரங்கள் அமல்படுத்தப்படும் இந்த புதிய முழு முடக்கம் காலத்திற்காக மக்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள மே 8 மற்றும் 9-ம் தேதி அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் தமிழகம் முழுவதும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டாஸ்மாக் இயங்காது
ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட தொடர்ச்சியாக இயங்கவேண்டிய தொழிற்சாலைகள் தவிர பிற ஆலைகள் செயல்படாது என்றும் ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
புதிய கட்டுப்பாடுகளின் விவரம்:
மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர பிற வெளிநாட்டு விமான போக்குவரத்திற்கான தடை தொடரும்.
வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம். ரயில் மற்றும் விமான நிலையங்களுக்கு செல்ல பயணிகள் பயணசீட்டு வைத்திருக்கவேண்டும்.
3000 சதுரஅடி கொண்ட வணிக வளாகங்கள் செயல்பட தொடர்ந்து தடை நீடிக்கப்படுகிறது.
குளிர்சாதன வசதி இல்லாத கடைகள் காலை 6 மணி முதல் பகல் 12 மணிவரை செயல்பட அனுமதி உண்டு.
உணவு டெலிவரி சேவை நிறுவனங்களான ஸ்விகி, சொமோடோ மற்றும் டான்சோ நிறுவனங்கள் பார்சல் எடுத்துச்செல்ல அனுமதி உண்டு.
மருத்துவம் சார்ந்த பணிகளுக்காக செயல்படும் தங்கும் விடுதிகள் மட்டும் செயல்பட அனுமதி. தங்கியிருக்கும் அறையில் உணவு அளிக்கப்படவேண்டும்.
உள்ளரங்கத்தில் நடைபெறும் கல்வி, கலாசார, பொழுதுபோக்கு,விளையாட்டு, அரசியல் விழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிற கட்டுப்பாடுகள் என்ன?
இறப்பு நிகழ்வுகளில் 20 பேருக்கு பேர் அனுமதி இல்லை.
அனைத்து வழிபாட்டு தளங்களிலும் திருவிழாக்களுக்கு தடை
சலூன், பார்லர்கள் இயங்க தடை.
கோயம்பேடு சில்லறை சந்தை இயங்க தடை.
தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற வேண்டும்.
ஏற்கனவே அனுமதிக்கப்பட்டிருந்த தொடர்ந்து இயங்கவேண்டிய தொழிற்சாலைகளுக்கு மட்டும் அனுமதி.
சுற்றுலா தளங்கள், கடற்கரை மற்றும் பூங்காக்களில் பொது மக்களுக்கு அனுமதி இல்லை
மருத்துவமனைகளுக்கு செல்பவர்கள் உரிய ஆவணங்கள் வைத்திருக்கவேண்டும்.
அம்மா உணவகங்கள் செயல்படும்
அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்.
நடைபாதைகளில் செயல்படும் காய்கறி, பூ விற்பனை நிலையங்கள் பகல் 12மணிவரை செயல்படலாம்.
திருமணங்களில் 50 நபர்கள் வரை பங்கேற்க அனுமதி
வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்பட அனுமதி
பெட்ரோல், டீசல் பங்குகள் செயல்பட அனுமதி
ரயில், விமானம் மற்றும் கப்பல் மூலமாக சரக்கு போக்குவரத்துக்கு அனுமதி.
BBC