இந்த ஆண்டுக்கான போர்முலா வன் கார் பந்தயத்தில் இங்கிலாந்து வீரர் லுயிஸ் ஹமில்டன் முதலிடம் பிடித்துள்ளாா்.
போர்முலா வன் கார் பந்தயம் உலகம் முழுவதும் 23 சுற்றுகளாக நடத்தப்படுகின்ற நிலையில் இதன் 4-வது சுற்றான ஸ்பெயின் கிராண்ட்பிரி பார்சிலோனாவில் நேற்று நடைபெற்றது.
308.424 கிலோமீற்றர் பந்தய தூரத்தை நோக்கி வழக்கம் போல் 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் பங்குபற்றியிருந்த நிலையில் தகுதி சுற்றில் முதலிடம் பிடித்தவரும் 7 முறை சாம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியவருமான இங்கிலாந்து வீரர் லுயிஸ் ஹமில்டன் (மெர்சிடஸ் அணி) பந்தய தூரத்தை 1 மணி 33 நிமிடங்கள் 07.680 வினாடிகளில் எட்டி முதலாவது இடத்தினைப் பெற்று 25 புள்ளிகளை பெற்றுள்ளாா்.
அவரை விட 15.841 வினாடி பின்தங்கிய நெதர்லாந்து வீரர் மக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) 2-வதாக வந்து 19 புள்ளிகளை பெற்றார். பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் (மெர்சிடஸ்) 3-வது இடத்தை பிடித்தார்.
இந்தக் காலப்பகுதியில் 3-வது வெற்றியை பெற்றுள்ள ஹமில்டன் சாம்பியன் கிண்ணத்தினைக் கைப்பறறும் வாய்ப்பில் மொத்தம் 94 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். 5-வது சுற்று போட்டி எதிா்வரும்23ம் திகதி மொனாக்கோவில்நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது