இந்தியாவில் பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ், மற்ற வைரஸ்களை விட வேகமாக பரவுவதாக தொிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு 44 நாடுகளில் அந்த வைரஸ் பரவியுள்ளதாக தொிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் அங்கு கடந்த வாரம் தினசரி பாதிப்பு 4 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் பரவலாகக் காணப்படும் உருமாறிய பி.1.617 எனும் கொரோனா வைரஸ் உலகளவில் 44 நாடுகளில் பரவியுள்ளதென உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடா்பில் உலகசுகாதார அமைப்பு வௌியிட்ட அறிக்கையில் இதுவரை 4,500 மாதிரிகளில் கண்டறியப்பட்டதாகவும் இந்தியாவைத் தவிர்த்து இந்த உருமாறிய வைரஸ் பிரித்தானியாவில்தான் அதிகமாகக் கண்டறியப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.