இன்றிரவு முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 04 மணி வரை பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் அக்காலப் பகுதியில், மக்கள் நடமாட்டம் முழுமையாக கட்டுப்படுத்தப்படும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர், பிரதிகாவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளாா்.
இந்தக் காலப் பகுதியில் மக்கள் வீடுகளுக்குள்ளேயே தங்கியிருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர் குறித்த தினங்களில் வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதி இல்லை எனவும் தொிவித்துள்ளாா்.
அத்தியவசிய சேவைகளுக்கு மாத்திரமே போக்குவரத்துகளை மேற்கொள்ள முடியும் எனவும் வைத்தியசாலைகளுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படும் எனவும் தொிவித்துள்ள அவா் மருந்துப்பொருட்களை கொள்வனவு செய்வதற்கும் விநியோகிப்பதற்கும் அனுமதி வழங்கப்படும் எனவும் தொிவித்துள்ளாா்.
பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள குறித்த 3 நாட்களின் பின்னர் அதாவது எதிர்வரும் திங்கட்கிழமையின் பின்னரே தேசிய அடையாள அட்டை முறை அமுல்படுத்தப்படும் எனவும் அதற்கமைய வௌ்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் முழுமையாக போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுவதாகவும் அவா் தொிவித்துள்ளாா்.