அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை உலக நாடுகளின் தலைவர்கள் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என பிரபல கால்பந்து வீரர் முகமது சாலா தனது ருவிட்டர் பக்கத்தினூடாக அழைப்பு விடுத்துள்ளார். இஸ்ரேல் – ஹமாஸ் இடையே வன்முறை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நான்கு வருடமாக தனது இல்லமாக மாறியுள்ள நாட்டின் பிரதமரையும் (பிாித்தானிய பிரதமர் பொரிஸ் ஜான்சன்) கேட்டுக் கொள்கிறேன் எனவும் அவா் தெரிவித்துள்ளார்.
மேலும் அவா் இந்தப் பதிவில் இஸ்ரேல்- பாலஸ்தீனப் பெயரை உபயோகிக்காமல் தனது கருத்தைத் தெரிவித்துள்ளதை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
எகிப்தைச் சேர்ந்த சர்வதேச அளவில் புகழ்பெற்ற கால்பந்து வீரரான முகமது சாலா, லீவர்புல் கிளப் அணியில் இடம்பெற்று விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது