)க.கிஷாந்தன்)
கடந்த சில தினங்களாக மலையகத்தின் பிரதான நகரங்களை அண்டிய பகுதியில் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் காணப்பட்டதன் காரணமாக காவல்துறையினா் மற்றும் சுகாதார பிரிவினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் திம்புள்ள பத்தனை காவல்துறையினா் கொட்டகலை நகரில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் முகமாக கொரோனா இன்னும் ஒழியவில்லை முகக்கவசம் முறையாக அணிய வேண்டும் ,சமூக இடைவெளி பேண வேண்டும் போன்ற வாசகங்கள் எழுதிய ஸ்டிக்கர்களை கடைகளுக்கு சென்று வழங்கி வருகின்றனர்.
இதன்போது கடையில் முறையாக முகக்கவசம் அணியாது இருந்தவர்கள், சமூக இடைவெளி பேணாது இருந்தவர்கள், கடையில் சுகாதார பொறிமுறைக்கு அமைவாக தொற்று நீக்கி மற்றும் பதிவேடுகள் பேணப்படாத கடைகள் உரிமையாளர்கள் மற்றும் பணிபுரிபவர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டனர்.
எதிர்வரும் நாட்களில் சுகாதார பொறிமுறைகளை முறையாக கடைப்பிடிக்காதவர்கள் அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் இதுதான் இறுதி அறிவித்தல் எனவும் காவல்துறையினா் கடை உரிமையாளர்களை கடுமையாக எச்சரித்தனர்..
இதேவேளை வாகனங்களில் சமூக இடைவெளி இல்லாது பயணித்தவர்களையும் கடுமையாக எச்சரித்து இறக்கிவிடப்பட்டனர்.