ரோம் நகரில் நடைபெற்று வரும் இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்றையதினம் நடைபெற்ற 3-வது சுற்று போட்டி ஒன்றில் 5 முறை சம்பியனும், முதல்தர வீரருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-2, 6-1 என்ற நேர் செட்டில் அலெஜான்ட்ரோ டேவிடோவிச்சை (ஸ்பெயின்) வென்று கால்இறுதிக்கு முன்னேறினார்.
முதல்முறையாக இந்த ஆட்டத்தில் 25 சதவீதம் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உற்சாகமாக ரசிகர்கள் முன்னிலையில் உற்சாகமாக விளையாடியதாக குறிப்பிட்டுள்ள ஜோகோவிச் கால்இறுதிப் போடியில் சிட்சிபாசை (கிரீஸ்) எதிர்கொள்ளவுள்ளாா்.
மற்றொரு போட்டியில் 9 முறை சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றிய ரபெல் நடால் (ஸ்பெயின்) 3-6, 6-4, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் டெனிஸ் ஷபோவலோவை (கனடா) வென்று கால்இறுதிக்கு முன்னேறியுள்ளாாா்.
அதேவேளை பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல்தர வீராங்கனையான ஆஷ்லி பார்ட்டி (அவுஸ்திரேலியா) 6-3, 6-3 என்ற நேர் செட்டில் குடெர்மிடோவாவை (ரஸ்யா) வென்று கால்இறுதிக்கு முன்னேறியுள்ளாா்.
அதேவேளை நடப்பு சம்பியனான சிமோனா ஹாலெப் (ருமேனியா) தன்னை எதிர்த்த ஏஞ்சலிக் கெர்பருக்கு (ஜெர்மனி) எதிராக முதல் செட்டை 6-1 என்ற கணக்கில் வென்று 2-வது செட்டில் 3-3 என்ற கணக்கில் சமநிலையில் இருந்த போது காயமடைந்தமையினால் போட்டியிலிருந்து பாதியிலேயே விலகியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது