அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தி கொண்ட மக்கள் பெரும்பாலான உள் மற்றும் வெளி இடங்களுக்கு முகக்கவசம் இல்லாமல் செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் நெருக்கடிமிக்க பேருந்துகள், விமானங்கள் மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது
அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் புதிய அறிவிப்பின்படி இரண்டு டோஸ்களையும் செலுத்தி கொண்ட மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க தேவையில்லை.
அந்தவகையில் இது அமெரிக்காவுக்கு சிறப்பான ஒரு தினம் என தொிவித்துள்ள அந்நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் இந்த கட்டுப்பாடு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின் தனது அலவலுகத்தில் முகக்கவசத்தை அகற்றியுள்ளாா்.
அத்துடன் பைடன் தனது டருவிட்டர் பக்கத்தில்,”விதிகள் மிக எளிமையானது. தடுப்பூசி செலுத்தி கொள்ளுங்கள் அல்லது தடுப்பூசி செலுத்தும் வரை முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள்,” என்று பதிவிட்டுள்ளாா்.
அமெரிக்காவின் 35 சதவீத மக்கள் இரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் இந்த புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
அதேவேளை இந்த புதிய கட்டுப்பாடுகள் மருத்துவமனைகள் மற்றும் சிறைச்சாலைகளுக்கு பொருந்தாது. அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் மக்கள் தொடர்ந்து முகக்கவசம் அணிந்து கொள்ளலாம் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் கொரோனா தொற்றால் அதிகம் பேர் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு கொரோனா தொற்றால் ஐந்து லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.