2020ஆம் ஆண்டின் உலக அழகியாக (மிஸ் யுனிவர்ஸ்) மெக்சிகோ நாட்டைச் சோ்ந்த அண்ட்ரியா மெஸா (AndreaMeza) தொிவு செய்யப்பட்டுள்ளாா். 10 ஆண்டுகளுக்குப் பின் மெக்சிகோவைச் சேர்ந்த பெண் ஒருவா் உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாா் .
74 நாடுகளைச் சேர்ந்த பெண்கள் பங்கேற்ற இந்த 69-வது ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி புளோரிடாவில் ஹொலிவுட் அரங்கில் உள்ள ரொக் ஹோட்டல் அண்ட் கஸினோவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் மிகுந்த பாதுகாப்புடன் நடைபெற்றது
இதில் மெக்சிகோ நாட்டின் 26 வயதான அண்ட்ரியா மெஸாவும், பிரேசிலின் ஜூலியா காமாவும் (28) இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்ற நிலையில் அண்ட்ரியா மெஸா உலக அழகியாக அறிவிக்கப்பட்டார்
கடந்த வருட உலக அழகியான தென் ஆப்பிரிக்காவின் ஜோஜிபினி டுன்ஸி, மெஸாவுக்கு மகுடத்தை சூட்டினார்.
2-வது இடத்தினை பிரேசில் நாட்டைச் சோ்ந்த ஜூலியா காமாவுக்ம் 3வது இடத்தினை பெரு நாட்டைச் சேர்ந்த ஜானிக் மெக்டாவும் பெற்றனா்.
நிகழ்ச்சிகளை ஹொலிவுட் நடிகர்கள் மரியா லோபஸ், ஒலிவியா கல்போ ஆகியோர் தொகுத்து வழங்கினர்.