118
கண்டி-போகம்பர சிறைச்சாலையின் கைதிகள் 104 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுள் 211 பேருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் அறிக்கையின் போதே, 104 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அத்துடன் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலும் 536 கைதிகளுக்கும் விரைவாக பி.சி.ஆர் அறிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக போகம்பர சிறைச்சாலை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான கைதிகள் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனரென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love