101
இலங்கை செல்லும் அனைத்து பயணிகள் விமானத்தையும் தற்காலிகமாக நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொவிட் நிலமையை கருத்திற் கொண்டு எதிர்வரும் மேமாதம் 21 ஆம் திகதி நள்ளிரவு முதல் மே 31 ஆம் திகதி நள்ளிரவு வரையான 10 நாட்களுக்கு இவ்வாறு தற்காலிக தடை விதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்துள்ளார்.
எனினும் நாட்டை விட்டு வௌியேறும் விமானங்களுக்கு இந்த தடை பொருந்தாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love