யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் அமைந்துள்ள ஆலயத்தில் பூஜை வழிப்பாடுகளில் ஈடுபட்டிருந்த பூசகர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டு காவற்துறைப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கொடிகாமம் வரணி வடக்கு பகுதியில் உள்ள ஆலயத்தில் முழுநேர பயண தடை அமுலில் இருக்கும் போது பூஜை வழிபாடுகள் இடம்பெறுவதாக கொடிகாம காவற்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து , ஆலயத்திற்கு சென்ற காவற்துறைனர் பூஜை வழிபாட்டில் ஈடுபட்டிருந்த பூசகர் உள்ளிட்ட மூவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மூவரையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் கடுமையாக எச்சரித்து , காவற்துறை பிணையில் விடுவித்தனர்.
மரண சடங்கில் கலந்து கொண்டவருக்கு கொரோனா – குருக்கள் உள்ளிட்ட 08 பேர் தனிமைப்படுத்தலில்!
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்ற மரண சடங்கில் கலந்து கொண்ட ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து , உயிரிழந்தவரின் குடும்பத்தினர் உள்ளிட்ட 08 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற மரண சடங்கில் கலந்து கொண்ட ஒருவருக்கு பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அதனை அடுத்து அவருடன் தொடர்பை பேணியவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை சுகாதார பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.
அதன் போது குறித்த நபர் மரண சடங்குக்கு சென்றிருந்ததை அறிந்து , மரணமானவரின் குடும்பத்தினர் , மரண சடங்கில் கிரிகைகள் செய்த குருக்கள் அவரது உதவியாளர் உள்ளிட்ட 08 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஏனையவர்களை அடையாளம் காணும் பணிகளையும் முன்னெடுத்துள்ளனர்.