நைஜீரியாவின் வடமேற்கில் உள்ள கெப்பி மாநிலத்தில் இருந்து நைஜர் மாநிலத்தின் மலேலே நகரில் உள்ள சந்தைக்கு செல்வதற்காக 180 பயணிகளுடன் புறப்பட்ட படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 4 பேர் நீரில் மூழ்கி பலியாகி உள்ளனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் 20 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.
அதேவேளை 156 போ் காணாமல் போயுள்ள நிலையில் அவா்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.
பழைய மற்றும் பலவீனமடைந்த படகில் படகில் அதிக அளவில் பயணிகள் ஏற்றப்பட்டு உள்ளதனாலேயே இவ்வாறு படகு மூழ்கியதாக தேசிய உள்நாட்டு நீர்வழி அமைப்பின் பகுதி மேலாளர் யூசுப் பிர்மா தொிவித்துள்ளாா். .
பயணிகளின் எண்ணிக்கையை குறைத்து கொள்ளுமாறு தாங்கள் கூறிய அறிவுரையை அவர்கள் கேட்கவில்லை எனவும் படகில் 30 பஜாஜ் மோட்டார் சைக்கிள்களும் ஏற்றப்பட்டு உள்ளன எனவும் அவா் தொிவித்துள்ளா்ா. மேலும் தொடா்ந்தும் மீட்பு பணியை மேற்கொண்டு வருவதாகவும் காணாமல் போன 156 பேரில் பலர் நீருக்கு அடியில் மூழ்கியிருக்கலாம் எனவும் அவா் கூறியுள்ளார்.