சென்னை நகரில் ஊரடங்கு காரணமாக ஏற்பட்டுள்ள போக்குவரத்து தடையால் காற்று மாசு பெருமளவு குறைந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் சென்னை நகரில் எடுத்துள்ள அளவீட்டிலேயே இந்த விடயம் தொிய வந்துள்ளது.
தொழிற்சாலைகள், போக்குவரத்து காரணமாக ஏற்படும் புகை உட்பட பல்வேறு காரணங்களால் சென்னை நகரில் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து வருகின்ற நிலையில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதுடன் வாகனங்களில் செல்வோருக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
சராசரியாக சென்னை நகரில் காற்று மாசு 27 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும் புறநகர் பகுதியில் உள்ள பெரும்பாலான ஆலைகளில் பணி நேரம் குறைக்கப்பட்டுள்ளதனால் சென்னை புறநகர் பகுதிகளிலும் காற்று மாசு குறைந்துள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.