இஸ்ரேல் – காசா இடையே இடம்பெற்ற மோதல்களில் நடைபெற்ற வன்முறை குறித்து புலன்விசாரணை நடத்துவதற்கு ஐ.நா. மனித உரிமை பேரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இஸ்லாமிய நாடுகள் குழு ஒன்று கொண்டுவந்த இந்த தீர்மானம் 24 வாக்குகளால் வெற்றி பெற்றிருந்தது. எனினும் இந்தப் பகுதியில் அமைதியைக் கொண்டுவருவதற்கான முயற்சி முன்னேற்றமடைவதற்கு இந்த தீர்மானம் அச்சுறுத்தலாக இருக்கும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
11 நாள்கள் இடம்பெற்ற இந்த மோதல்களில் பாலத்தீனர்கள் வாழும் காசாப் பகுதியில் 242 பேரும், இஸ்ரேலில் 13 பேரும் கொல்லப்பட்டிருந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை எகிப்து எடுத்த முயற்சியால் இந்த மோதல் முடிவுக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது