95
கோப்பாய் காவல்துறைப் பிரிவில் விமானப் படையின் உதவியுடன் ட்ரோன் கமரா ஊடான கண்காணிப்பை ஆரம்பித்துள்ளனர்.
இன்று இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
கோப்பாய் காவல் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில் இலங்கை விமானப் படையின் உதவியுடன் பயணத் தடை காலப்பகுதியில் ட்ரோன் கமராவின் உதவியுடன் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை மீறுவோரைக் கைது செய்யும் பணி கடந்த ஒரு வாரமாக முன்னெடுக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் மாநகரில் நேற்றுமுன்தினம் கண்காணிப்புப் பணி ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிலையில் கோப்பாய் காவல்துறைப் பிரிவில் இந்தப் பணி இன்று முன்னெடுக்கப்படுகிறது
Spread the love