பருத்தித்துறை பகுதியில் கடற்படையினரால் கஞ்சா போதை பொருள் கடத்தல் முறியடிக்கப்பட்டதுடன் பெருமளவான கஞ்சா போதை பொருளும் மீட்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை கொட்டடி பகுதியில் இன்றைய தினம் அதிகாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த பகுதிக்கு கடல் வழியாக கஞ்சா போதை பொருள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அப்பகுதினை கடற்படையினர் சுற்றி வளைத்தனர்.
அதன் போது , மோட்டார் சைக்கிளில் குறித்த கஞ்சா போதை பொருளை வேறு இடத்திற்கு மாற்றுவதற்காக அங்கு வந்திருந்த இரண்டு நபர்கள் கடற்படையினரை கண்டதும் , மோட்டார் சைக்கிளிலை கைவிட்டு விட்டு தப்பி ஓடினர்.
அதனை அடுத்து அவ்விடத்தில் கடற்படையினர் தேடுதல் நடத்திய போது , 48 கிலோ 900 கிராம் கேரளக் கஞ்சா போதைப்பொருள், 2 மோட்டார் சைக்கிள்கள், படகு ஒன்று, அதற்கான வெளியிணைப்பு இயந்திரம் என்பவற்றை மீட்டனர்.
மீட்கப்பட்ட சான்று பொருட்களை கடற்படையினர் , பருத்தித்துறை காவல்துறையினரிடம் கையளித்துள்ளனர்.காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்