கிழக்கு மாகாணத்தில் பழங்குடி மக்கள், குடியேற்றப்பட்ட மலையக மக்கள், தொலை தூரக் கிராமங்களில் வாழும் மக்கள்-எல்லைப்புறக் கிராமங்களில் வாழும் மக்கள் என பல்லாயிரக் கணக்கான மக்கள் பின்தங்கிய பொருளாதார-சமூக நிலையில் வாழ்ந்து வருகின்றார்கள்.
இம் மக்கள் கடந்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு-அகதிகளாக இடம் பெயர்ந்து, இன்று மீள் குடியேற்றப்பட்டுள்ளார்கள்.
முழுமையற்ற மீள் குடியேற்றத் திட்டம், புனரமைக்கப்படாத வீதிகள்-பொதுப் போக்கு வரத்தற்ற நிலை, குடிநீர் இன்மை, கல்வி கற்பதற்கான வசதிகள் இன்மை, வர்த்தக-சேவை மையங்கள் இன்மை, பின்தங்கிய பொருளாதார நிலை, தொழில் வாய்ப்பற்ற நிலை – போதிய வருமானமின்மை எனப் பல பிரச்சினைகளுடன் இம் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.
யானைகளின் தாக்குதல்கள்- உயிரழிவு, பொருளாதார அழிவையும் இம்மக்கள் எதிர்நோக்கி வருகின்றார்கள்.
அண்மைக்கால கொரோணா பயணத் தடை இம்மக்களின் வாழ்வில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.
கிழக்கு மாகாணத்தில் நீண்ட காலமாகப் பின் தங்கிய நிலையில் வாழ்ந்து வரும் மக்கள் அபிவிருத்தி அடையாமல் கிழக்கின் அபிவிருத்தியும் நாட்டின் அபிவிருத்தியும் சாத்தியமற்றது!
இம் மக்களின் அபிவிருத்தியில் சமூக அக்கறை உள்ளவர்களை கவனம் செலுத்துமாறு வேண்டுகிறோம்.
@ எட்வின் விஜயரெட்ண
மீட்சி – மக்களின்
மீட்சிக்கான
செயற்றிட்ம்