கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் செய்தியாளா்களைச் சந்திக்க மறுத்த ஜப்பான் டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகாவுக்கு 15,000 டொலா்கள் அபராதம் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவா் பிபிரெஞ்ச் ஓபன் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாாிஸில் நடைபெற்றுவரும் பிரெஞ்ச் ஓபன் தொடாின் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்ற நவோமி ஒசாகா அதன்பின்னா் செய்தியாளா்களைச் சந்திக்க மறுத்துள்ளா்ா.
அதற்காக போட்டி நடுவர் அவருக்கு 15,000 டொலா்கள் அபராதம் விதித்துள்ளதுடன் தொடர்ந்து இதுபோன்று அவர் நடந்து கொண்டால் கூடுதல் தடை விதிக்க வேண்டி வரும் என எச்சாித்துள்ளார்
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளுக்கான நடத்தை விதிகளின் கீழ், போட்டியில் வெற்றி, தோல்வி என முடிவு எதுவாக இருப்பினும், டென்னிஸ் விளையாட்டு மற்றும் ரசிகர்களின் நலனுக்காக செய்தியாளா்களிடம் பேச வேண்டியது வீரர், வீராங்கனைகளின் கடமை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 வயதான ஒசாகா 2018ஆம் ஆண்டு அமெரிக்க ஓபனையும், 2019ஆம் ஆண்டில் அவுஸ்திரேலிய ஓப்பனையும் கைப்பற்றியதனைத் தொடா்ந்து டென்னிஸ் தரவரிசையில் முதலாம் இடத்தை வகித்த முதல் ஆசிய நாட்டவர் என்ற பெருமைக்குாியவரானாா். தற்போது அவர் டென்னிஸ் தர வரிசையில் 10ஆவது இடம் வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது