முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் இன்றுமுற்பகல் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த பெண் ஒருவா் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.
தனது காணியில் உள்ள பனைமரத்துக்கு அருகாமையில் குப்பைகளை கூட்டி வைத்து நெருப்பு பற்றவைத்தபோதே குண்டு வெடித்துள்ளதாகவும் அவரது உயிருக்கு எவ்விதமான அச்சுறுத்தலும் இல்லை எனவும் காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.
அத்துடன் சம்பவ இடத்திற்கு சென்ற புதுக்குடியிருப்பு காவல்துறையினா் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் குறித்த பகுதியில் மேலும் வெடிபொருட்கள் இருக்கிறதா என்பது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது