இலங்கை பிரதான செய்திகள்

யாழ்.பல்கலையில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பம்

யாழ். பல்கலைக் கழகப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடு ஜனாதிபதியின் விசேட அனுமதியின் கீழ் ஊசி இன்றைய தினம் ஆரம்பமானது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சுமார் 1,600 பேருக்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஏனைய  பீடங்களில் 500 பேருமாக மொத்தமாக  2100  கொரோனா பேருக்கு தடுப்பூசி வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ விசேட உத்தரவை வழங்கியுள்ளதன்  அடிப்படையில், இன்று காலை யாழ் பல்கலைக் கழக பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது

இதற்கமைய இன்றும் , நாளையும் இரு தினங்கள் பல்கலைக்கழகப் பணியாளர்களுக்கு சினோபாம் கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களின் கல்விச் செயற்பாடுகளை வழமைக்குக் கொண்டுவரும் வகையில் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் சகலருக்கும் கொரோனாத் தடுப்பசிகளை வழங்குவதற்கு பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதேநேரம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சுமார் 2100 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு அனுப்பிய கோரிக்கை  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

இதனையடுத்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சுமார் 2100 பேருக்கு உடனடியாக கொரோனா தடுப்பூசி வழங்க ஜனாதிபதி பணிப்புரை வழங்கியதையடுத்து இன்றும் நாளையும் பல்கலைக்கழகப் பணியாளர்களுக்கு சினோபாம் கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் சிறீ சற்குண ராஜா தடுப்பூசி ஏற்றி ஆரம்பித்து வைக்க அனைத்துபல்கலைக்கழகப் பணியாளர்களும் தாமாக முன்வந்து தமக்குரிய தடுப்பூசிகளின் பெற்றுக்கொள்வதை காணக்கூடியதாக இருந்தது இதேவேளை தடுப்பு ஊசி ஏற்றும் செயற்பாட்டினை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

 

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.