சினிமா பிரதான செய்திகள்

மணிரத்னத்தின் பெயரில் போலி ருவிட்டர் கணக்கு

முன்னணி இயக்குநர் மணிரத்னத்தின் பெயரில் போலி ருவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டு இருப்பதாக அவரது மனைவி நடிகை  சுஹாசினி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேற்றையதினம் (ஜூன் 2)    மணிரத்னம் தனது பிறந்த நாளைக் கொண்டாடியிருந்தநிலையில்    அவருக்குப் பல்வேறு திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார்கள்.

மேலும் அவரது பிறந்த தினமான நேற்று தற்போது  அவா் இயக்கிவரும்  பொன்னியின் செல்வன் படம் தொடர்பாக ஏதேனும்  விபரங்கள் வரலாம் என  ரசிகர்கள் எதிர்பார்த்த போதும்   எந்தவொரு விபரங்களையும் படக்குழு வெளியிடவில்லை

இந்தநிலையில் நேற்று    (ஜூன் 2) பிறந்த நாளை முன்னிட்டு ருவிட்டர் பக்கத்தில் இணைவதாக மணிரத்னத்தின்  புகைப்படம் போட்டு ருவிட்டர் கணக்கு ஒன்று தொடங்கப்பட்டது. இதனைப் பலரும் உண்மை என நம்பி பின்தொடரத் தொடங்கினார்கள்.

ஆனால் அது போலியான ருவிட்டர் கணக்கு என்பது உறுதியாகியுள்ளது. இந்தக் கணக்கு தொடர்பாக சுஹாசினி மணிரத்னம் தனது ருவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“இயக்குநர் மணிரத்னம் இன்று ருவிட்டரில் பக்கம் தொடங்கியிருப்பதாக ஒருவர், @Dir_ maniratnam என்கிற பக்கத்திலிருந்து ருவீட் செய்துள்ளார். இது பொய், இவர் ஒரு போலி நபர். இதைப் பற்றிப் பரப்புங்கள். நன்றி.”  என சுஹாசினி மணிரத்னம் தெரிவித்துள்ளாா்

 

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.