ஜப்பானில் தொடரும் கொரோனா அச்சம் காரணமாக ஒலிம்பிக் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க உதவும் பணிகளில் ஈடுபட்டுள்ள 10,000 தன்னார்வலர்கள் விலகியுள்ளனர்.
கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள கடுமையான நெருக்கடிக்கு மத்தியில் ஜப்பானில் வரும் ஜூலை 23ஆம் திகதி ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், ஒலிம்பிக் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க உதவும் பணியில் ஈடுபட்டுள்ள 10,000 தன்னார்வலர்கள் விலகியுள்ளனர். அவர்கள் விலகியதற்கு கொரோனா தொற்று பரவலாம் என்ற அச்சமும் ஒரு காரணமாக இருக்கலாம் என போட்டி அமைப்பாளர்கள் தொிவித்துள்ளனா்.
கடுமையான சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்புடன் விளையாட்டுகளை நடத்துவதாக ஒலிம்பிக் போட்டி அமைப்பாளர்களும் சர்வதேச ஒலிம்பிக் அமைப்பும் உறுதியளித்துள்ள போதிலும் , பாதுகாப்பு குறித்த சந்தேகங்களும் கவலைகளும் ஏற்பட்டுள்ள நிலையில் ஜப்பானில் ஒலிம்பிக் போட்டி நடைபெறுமா என்பது பலருக்கு சந்தேகத்தினை ஏற்படுத்தி உள்ளது.