ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் இன்று (05) காலை இடம்பெற்ற விபத்தில் ஹட்டன் காவல்நிலைய சிறு மற்றும் பாரிய குற்றப் பிரிவுக்கு பொறுப்பான உப- காவல்துறை பொறுப்பதிகாரி உயிரிழந்துள்ளதுடன் மேலும் 3 காவல்துறை அதிகாாிகள், வாகன சாரதி ஆகியோருடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
உப காவல்துறை பொறுப்பதிகாரி பயணம் செய்த வாகனம், வட்டவளை கரோலினா தோட்ட பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் 200 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஹட்டனிலிருந்து கண்டி இராணுவ முகாமில் ஒப்படைப்பதற்காக, கொரோனாவினால் உயிாிழந்த ஒருவாின் உடலைக் கொண்டுச் சென்ற வாகனத்துக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக சென்ற கேகாலையைச் சோ்ந்த 57 வயதான எஸ்.பெனடிக் என்ற காவல்துறை அதிகாரியே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார்.
உப- பொலிஸ் பொறுப்பதிகாரி பயணம் செய்த வாகனம், வட்டவளை கரோலினா தோட்ட பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் 200 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது