கொரோனா வைரஸ் தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதிவரை அமுலில் இருக்கும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த போதும் 14 ஆம் திகதிக்கு பின்னர் பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்படுமா என்பது குறித்து இதுவரை எந்தவித அறிவிப்பும் விடுக்கப்படவில்லை.
இந்நிலையில், பயணக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை மதித்து பொதுமக்கள் வீடுகளில் இருந்தால் மட்டுமே எதிர்வரும் 14ஆம் திகதிக்கு பின்னர் பயணக்கட்டுபாட்டினை நீக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இன்று (05) தெரிவித்துள்ளார்.
எனவே பயணக்கட்டுபாட்டினை நீக்கப்பட வேண்டுமாயின் பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என அவர் தொிவித்துள்ளாா்.