சிலவகை மருந்துகள், ஊசி மருந்துகளுக்கு ஒவ்வாமை உடையவர்கள் மற்றும் வேறு ஆபத்துக்குரிய நோய் நிலமை உடையவர்களுக்கும் அவசர சிகிச்சைப் பிரிவுகள் உள்ள வைத்தியசாலைகளுக்கு அழைத்து கோவிட்-19 தடுப்பூசி வழங்கும் திட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் சாவகச்சேரி, தெல்லிப்பழை, ஊர்காவற்றுறை, பருத்தித்துறை ஆகிய ஆதார வைத்தியசாலைகளில் இவ்வாறு தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.
கோவிட்-19 தடுப்பூசிகள் பெற்றுக்கொள்ள வருகை தந்தவர்கள் மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் மருந்து ஏற்றப்படுகிறது.
பெருமளவானோர் தமக்கான கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வைத்தியசாலைகளுக்கு வருகை தந்துள்ளனர்.