பயண தடைகள் அமுலில் உள்ள போதிலும் , யாழ்.நகர் பகுதியில் வெள்ள வாய்க்கால் தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள் யாழ்.மாநகர சபையின் தூய்மைப்படுத்தல் தொழிலாளிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இன்றைய தினம் குறித்த வாய்க்காலின் ஒரு பகுதியின் மேல் பகுதி சீமெந்து இடப்பட்டு நீண்டகாலமாக மூடப்பட்டு இருந்துள்ளன. அவற்றினை வெட்டி சுத்தம் செய்ய முற்பட்ட போது பல விதமான கழிவுகள் அதனுள் காணப்பட்டதுடன் , கொடிய விஷப்பாம்பும் காணப்பட்டுள்ளது.
பாம்புகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் வாய்க்கால் தூய்மைப்படுத்தும் பணிகளை பணியாளர்கள் முன்னெடுத்துவருகின்றனர். இதேவேளை குறித்த பணியினை யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் , உறுப்பினர் வ. பார்த்தீபன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு , தொழிலாளிகளுடனும் கலந்துரையாடி இருந்தனர்.